வெள்ளி, 3 செப்டம்பர், 2010

மேலமருத்துவக்குடி ஐராவதேஸ்வரர் அபிராமிநாயகி


இடைக்குளம் - (மேலமருத்துவக்குடி)




இறைவர் திருப்பெயர்  : ஐராவதேஸ்வரர். 
இறைவியார் திருப்பெயர்  : அபிராமிநாயகி. 
தல மரம்   :  வில்வ மரம் 
தீர்த்தம்    : சந்திர புஷ்கரணி. 
வழிபட்டோர்   : ஐராவதம். 
வைப்புத்தலப் பாடல்கள்  : அப்பர் - நள்ளாறும் பழையாறுங் (6-71-10). 

தல வரலாறு

  • மக்கள் வழக்கில் 'மேலமருத்துவக்குடி' என்று வழங்குகிறது.
  • ஐராவதம் வழிபட்ட தலம்; ஐராவதம் வழிபட்டு பேறு பெற்றதனால் இறைவனுக்கு ஐராவதேசுவரர் என்று பெயர்.

சிறப்புக்கள்

  • இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
  • பெரிய சிவாலயம்; பழைமையானது, கற்றளி.
  • நந்தி - நீர் கட்டும் அகழி அமைப்பில் உள்ளது.
  • பிராகாரத்தில் - வரிசையாக நான்கு சிவலிங்க மூர்த்தங்கள் உள்ளன.
  • மூலவர் - சதுர ஆவுடையார்; சற்று கூரான பாணம்.
  • கோயில் கல்வெட்டில் இறைவன் பெயர் "உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர்நாட்டு....... திருஇடைக்குளமுடையார்" என்றுள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் ஆடுதுறை வந்து - அங்கிருந்து ரயில்வே ரோடில் வந்து மேலமருத்துவக்குடியை அடையலாம். 1கி.மீ. தொலைவு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

BHARATHI BALU

SRI RAJAKAALIAMMAN MELAMARUTHUVAKUDI ADUTHURAI

MELA MARUTHUVAKUDI

MELA MARUTHUVAKUDI

பழனியப்பா

தங்கத்தாமரை தொட்டியலிலே

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன்

Isai Tamizh Nee Seida

அழகென்ற சொல்லுக்கு முருகா

Paattum Naane Bhavamum Naane